ஜெகன் மோகன் பிறந்தநாள்… மோடி, ஸ்டாலின் வாழ்த்து!

 

ஜெகன் மோகன் பிறந்தநாள்… மோடி, ஸ்டாலின் வாழ்த்து!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ஆந்திராவில் அக்கட்சித் தொண்டர்கள் அவருடைய பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ஆந்திராவில் அக்கட்சித் தொண்டர்கள் அவருடைய பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்தில், “ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

jegan

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இதுபோன்று நிறைய பிறந்த நாள் கண்டு, ஆந்திர மக்களுக்கும் நாட்டுக்கும் பணியாற்ற வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

stalin

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து கூறியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு பூச்செண்டு அளிக்கும் படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார். பலரும் ஜெகன்மோகனுக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.