ஜூலை 31 இல் மோடி வருகை… ஆகஸ்ட் 1 ஆம் தேதி எழுந்து அருள்பாலிக்கிறார் அத்திவரதர்! இதுதான் அந்த ஆகமவிதியாம்!! 

 

ஜூலை 31 இல் மோடி வருகை… ஆகஸ்ட் 1 ஆம் தேதி எழுந்து அருள்பாலிக்கிறார் அத்திவரதர்! இதுதான் அந்த ஆகமவிதியாம்!! 

இதுவரை சயனகோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார்.

இதுவரை சயனகோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர், வரும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி தருகிறார். இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டி இருப்பதால், வரும் ஜூலை 31 அன்று மட்டும் மாலை 5 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசன அனுமதி தரப்படுகிறது. 

ஆக1 முதல் அத்திவரதரின் நின்றகோல தரிசனம் தொடரும். அதாவது, ஜூலை 31 அன்று 12 மணி வரையில், தரிசன பாஸ் பெற்றவர்கள், 3 மணி வரையில் விஐபி தரிசனம், மாலை 5 மணி வரையில் பக்தர்கள் தரிசனம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

அத்தி வரத பெருமாளை தரிசிக்க பிரதமர் மோடி வரும் ஜூலை 31ம் தேதி வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வருகின்றனர். 31ம் தேதி சயன கோல அத்தி வரதரை தரிசனம் செய்யும் மோடி, ஆகஸ்ட் 1ம் தேதி நின்ற நிலை வரதரை தரிசித்து விட்டு திரும்ப திட்டமிட்டுள்ளார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கோயில் குளத்தில் வைக்கப்பட்டிக்கும் அத்தி வரத பெருமாள் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அத்தி வரதர் வைபவம் இந்தாண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டு தற்போது வெகு விமர்சையாக நடைப்பெற்று வருகின்றது.

அத்தி வரதர் குளத்திலிருந்து எடுக்கபட்டு 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அதில் முதல் 24 நாட்கள் கிடந்த நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜூலை 25 ஆம் தேதி அத்திவரதரை நின்ற நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் வைக்கவில்லை… மோடி பார்ப்பதற்குதான் வைக்கவில்லையோ என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.