ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் வைகோ!

ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் வைகோ!

ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அவருடன் அதே நாளில் திமுக எம்பிக்கள் வில்சன், சண்முகம் ஆகியோரும் பதவியேற்கின்றனர்

ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அவருடன் அதே நாளில் திமுக எம்பிக்கள் வில்சன், சண்முகம் ஆகியோரும் பதவியேற்கின்றனர்

தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கு ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்பதவிகளுக்கு திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வைகோவின் மீது தேசதுரோக வழக்கு உள்ள நிலையில் அவரின்  வேட்புமனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. இந்நிலையில் வைகோவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி வில்சன், சண்முகம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளனர்.