ஜூலை ரேஸில் தனுஷுடன் மோதும் சந்தானம்!  

 

ஜூலை ரேஸில் தனுஷுடன் மோதும் சந்தானம்!  

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. அதை தொடர்ந்து அவர் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. அதை தொடர்ந்து அவர் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா நடித்திருக்கிறார். 

இந்தப் படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான நிலையில் தற்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே தேதியில் தான் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படமும் ரிலீஸாக உள்ளது. ஏற்கனவே இந்த படம் 3 வருடங்களுக்கு பிறகு வருவதால் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. 

enpt

அதனால் அந்த படம் வெளியாகும் அன்றைய சந்தானம் படமும் வெளியாவதால் எந்த படத்தின் காலெக்ஷன் வாரிக்குவிக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.