ஜூன் 5 ஆம் தேதி முதல் தென் மேற்கு பருவ மழை தொடக்கம் – இந்திய வானிலை ஆய்வு மையம்

 

ஜூன் 5 ஆம் தேதி முதல் தென் மேற்கு பருவ மழை தொடக்கம் – இந்திய வானிலை ஆய்வு மையம்

ஜூன் 1 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

தென்மேற்கு பருவமழை தொடங்குவதன் அறிகுறி அந்தமான், நிக்கோபார் தீவுகளில் தென்படும். அதனை மையமாக கொண்டு எப்போது பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். வழக்கமாக மே மாதம் 20ஆம் தேதிக்கு மேல் உருவாகும் அறிகுறி, இந்த முறை சற்று முன்னரே காணப்பட்டதால் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

ttn

இந்நிலையில் கேரளாவில் பருவ மழை தாமதமாகத் தான் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதவாது ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜூன் 5 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக வலுப்பெறும் என்றும் அந்த புயலின் பெயர் ஆம்பன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.