ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து – ரயில்வேத்துறை அறிவிப்பு!

 

ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து – ரயில்வேத்துறை அறிவிப்பு!

கடந்த மாதம் 14 ஆம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ரயில்களில் அதிகமாக பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே  3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே கடந்த மாதம் 14 ஆம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. 

ttn

அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு பிறகு ரயில் சேவையை மீண்டும் துவக்க ரயில்வேத் துறை முடிவெடுத்தது. அதன் படி, ஜூன் 12 ஆம் தேதி முதல் ரயில்சேவை தொடங்கும் என்றும் அறிவித்தது. இந்நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில் பயணங்களுக்கான முன்பதிவுகள் ரத்து செய்யப்படுகிறது என்றும்  பெறப்பட்ட முன்பணம் அனைத்தும் பயணிகளின் கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும் என்றும் ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்து மற்ற மாநிலங்களில் சிக்கியுள்ளவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.