ஜூன் 2 ராசையா பிறந்த நாள்,ஆனால் இளையராஜா பிறந்தது இன்னிக்கு தான் தெரியுமா!

ஜூன் 2 ராசையா பிறந்த நாள்,ஆனால் இளையராஜா பிறந்தது இன்னிக்கு தான் தெரியுமா!

1976 மே 14ம் தேதி! தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத நாட்களில் ஒன்று! 43 வருடங்களுக்கு முன்னால்,இதே நாளில்தான் ‘அன்னக்கிளி’ படம் ரிலீஸ்.இளையராஜா என்கிற மாபெரும் கலைஞன் அறிமுகமாகி,தமிழ் திரை இசையில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்த தினம்.

இன்று இளையராஜா உட்கார்ந்திருக்கும் சிம்மாசனம் யாரும் விட்டு கொடுத்ததோ,உருவாக்கியதோ அல்ல,அவரது இசை ஏற்படுத்தித்தந்த இடம் அது.இந்த இடத்தை அவர் எளிதாக அடைந்துவிடவில்லை,’அன்னக்கிளி’ படத்துக்கு விமர்சனம் எழுதிய ஆனந்தவிகடன் ‘உற்சாகமாக பாட்டுப்பாடியபடி’ கதாநாயகி அறிமுகமாவதாக எழுதியதே தவிர,அந்த பாட்டுப்போட்டவனைப் பற்றி ஒரு வார்த்தை இல்லை!

ilayaraja

ஏன்,நம்ம கலஞானி கமலஹாசன்? அவள் அப்படித்தான் படத்தில் ‘ஓ..மச்சானப் பாத்தீங்களா .. பாடினாங்களே ,அந்த ஜானகியாங்கற கேள்விக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘இல்லைங்க,எனக்கு சிங்காரவேலனே தேவா ஜானகியத்தா தெரியும்!’ இதற்கெல்லாம் தனது அடுத்தடுத்த படங்களில் பாட்டாலே பதில் சொன்னார்.

‘நான் பேச வந்தேன்’…’ஒருநாள் உன்னோடு ஒருநாள்’…’கண்ணன் ஒரு கை குழந்தை’…’அந்தப்புரத்தில் ஒரு மகராணி’ என்று அடுத்தடுத்து ஹிட் பாடல்களை கொடுத்தார்.16 வயதினிலே, தியாகம்,சிட்டுக்குருவி,இளமை ஊஞ்சலாடுகிறது,முள்ளும் மலரும், ப்ரியா என்று தமிழ் சினிமாவின் அடையாளமானார் இசைஞானி இளையராஜா.

1980 களிலோ,இளையராஜா தென்னகமெங்கும் நீக்கமற நிறைந்துவிட்டார். இப்போது இளையராஜா இல்லாமல் இந்திய இசை இல்லை… இரவு நேர தூக்கமும் இல்லை! வரலாற்றில் இன்று என செய்தி போடும்போது இந்த மே 14 யும் இனி சேர்த்துக்கொள்ள வேண்டும்