ஜூன் 15க்குப் பிறகு நிலைமை சீராகிவிடுமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

 

ஜூன் 15க்குப் பிறகு நிலைமை சீராகிவிடுமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா ஊரடங்கு முடியாத நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 15ம் தேதிக்குப் பிறகு நிலைமை சீரடைந்துவிடுமா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு முடியாத நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். தன்னிச்சையாக எடுத்த முடிவுபோல இருந்ததால் பெற்றோர்கள், எதிர்க்கட்சிகள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற வலியுறுத்தின. ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

sslc

இந்த நிலையில் தேர்வு நடப்பது உறுதி என்று கூறிக்கொண்டு முதலமைச்சருடன் ஆலோசனை செய்யச் சென்ற செங்கோட்டையன், ஆலோசனைக்குப் பிறகு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ம் தேதியிலிருந்து 25ம் தேதி வரை நடைபெறும் என்றார். இந்த நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 15ம் தேதிக்குப் பிறகு நிலைமை சீராகிவிடுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான்.
அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை!” என்று கூறியுள்ளார்.