ஜூன் மாதம் வரை ஏகப்பட்ட திருமண நாட்கள் இருக்கு….. அதனால் தங்கம் நல்லா விற்பனையாகும்

 

ஜூன் மாதம் வரை ஏகப்பட்ட திருமண நாட்கள் இருக்கு….. அதனால் தங்கம் நல்லா விற்பனையாகும்

ஜூன் மாதம் வரை ஏகப்பட்ட திருமண நாட்கள் உள்ளதால் தங்கம் விற்பனை நல்லா இருக்கும். அதனால் தங்கம் இறக்குமதியும் இந்த வருஷம் சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிகரிக்கும் என அனைத்து இந்திய ரத்தின மற்றும் ஆபரண உள்நாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தங்கம் இறக்குமதியில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. 2019ம் ஆண்டில் தங்கம் இறக்குமதி 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டின் தங்கம் விற்பனை மற்றும் இறக்குமதி நிலவரம் குறித்து அனைத்து இந்திய ரத்தினம் மற்றும் ஆபரண உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் என்.ஆனந்த பத்மநாபன் பேட்டி ஒன்றில் கூறியதாவது:

என். ஆனந்த பத்மநாபன்

2016ம் ஆண்டில் நம் நாட்டில் தங்கம் இறக்குமதி 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 690 டன்னாக (உத்தேசம்) குறைந்தது. அந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தது, தங்கத்தின் விலை உயர்ந்தது. கடந்த ஆண்டு தங்கத்தின் விலை சுமார் 25 சதவீதம் அதிகரித்தது. மேலும் இந்த விலை உயர்வு வேகமாக நிகழ்ந்ததால் மக்களால் அதனை சமாளிக்க முடியவில்லை. இது போன்ற காரணங்களால் தங்க விற்பனை குறைந்தது.  அதன் எதிரொலியாக அதன் இறக்குமதியும் குறைந்தது. 

தங்கம்

ஆனால் இந்த ஆண்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தங்கம் விற்பனை அதிகரிக்கும். இந்த ஆண்டு ஜூன் வரை ஏராளமான திருமண நாட்கள் உள்ளது. இதனால் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும். மேலும் நடுத்த மற்றும் அடித்தட்டு மக்களின் ஒரே முதலீடு சாதனம் தங்கம்தான். அதனால் விலை எப்படி இருந்தாலும் அவர்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்குவார்கள். இதனால் இந்த ஆண்டில் 750 டன் வரை நம் நாட்டில் தங்கம் இறக்குமதியாகும். ஆபரண துறை விற்பனை மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.