‘ஜீவனாம்சம் கேட்டு மனைவி மனு’..கணவன் திருநங்கையாக மாறியதால் ஜீவனாம்சம் இல்லை : நீதிமன்றம் உத்தரவு

 

‘ஜீவனாம்சம் கேட்டு மனைவி மனு’..கணவன் திருநங்கையாக மாறியதால் ஜீவனாம்சம் இல்லை : நீதிமன்றம் உத்தரவு

சென்னையைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் கடந்த 1998 ஆம் ஆண்டு  ராமானுஜம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

சென்னையைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் கடந்த 1998 ஆம் ஆண்டு  ராமானுஜம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர்கள் இரண்டு பேரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், மணிமேகலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுத்திருந்தார். அந்த மனுவில், ‘திருமணம் ஆகி எங்களுக்குள் எந்த தாம்பத்திய உறவும் இல்லாததால் மருத்துவச் சிகிச்சை எடுத்தும் சரியாகவில்லை. 2009 ஆம் ஆண்டு அவர் என்னை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார். அதனால், ஒரு வீடு, ரூ.10 லட்சம் பணம் மற்றும் மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

ttn

அந்த மனுவை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது, ராமானுஜம் தான் திருநங்கையாக மாறிவிட்டதாகவும் தற்போது பிச்சை எடுத்து வருவதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், திருமணம் நடந்து விட்டது என்பதற்கெல்லாம் ஜீவனாம்சம் கொடுக்க முடியாது. அவர் திருநங்கையாக மாறி அரசின் ஆதரவில் இருப்பதால் ஜீவனாம்சம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.