ஜீவஜோதிக்கு சரவணபவன் அண்ணாச்சி வாங்கி வைத்திருந்த அல்வா… உச்சநீதிமன்றம் மயங்கி விடுமா..?

 

ஜீவஜோதிக்கு சரவணபவன் அண்ணாச்சி வாங்கி வைத்திருந்த அல்வா… உச்சநீதிமன்றம் மயங்கி விடுமா..?

இன்னும் சற்று நேரத்தில் தெரியும் ஜீவஜோதிக்கு கொடுக்க வைத்திருந்த அல்வாவை நீதிமன்றமாவது ஏற்றுக்கொள்ளுமா என்பது?

ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அவரது கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன்  அண்ணாச்சி ராஜகோபால் உடல்நிலையை காரணம் காட்டி சரணடையாமல் இருந்து வருகிறார். 

சோசியர் பேச்சைக் கேட்டு ஜீவஜோதியை அடைய நினைத்தார் ராஜகோபால் அண்ணாச்சி. இதற்காக அவரது  கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று 2001-ம் ஆண்டு கொலை செய்து வீசினார். Rajagopal

இந்த வழக்கில் ராஜகோபால் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.  ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 55 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 
இதை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.ஆனால் அண்ணாச்சிக்கு போதாத காலம்  அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டையாக அதிகரித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. ஆயுள் தண்டனையை எதிர்த்து ராஜகோபால் அண்ணாச்சி  உச்சநீதிமன்றத்தை நாட்டினார். Rajagopal

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இம்மாதம் 7ம் தேதி அதாவது நேற்று ராஜகோபால் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அண்ணாச்சி  ஆஜராகவில்லை.

அண்ணாச்சி  ராஜகோபால் நரம்பு மண்டல நோயால் சிகிச்சை எடுத்து வருவதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாது. சரணடைய கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

jeevajothy

இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் ராஜகோபால் தரப்பு முடிவு செய்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் தெரியும் ஜீவஜோதிக்கு கொடுக்க வைத்திருந்த அல்வாவை நீதிமன்றமாவது ஏற்றுக்கொள்ளுமா என்பது?