ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை: உண்மையில் காப்பற்றியது யார் தெரியுமா?

 

ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை: உண்மையில் காப்பற்றியது  யார் தெரியுமா?

உண்மையில் சாலையில் கிடந்த குழந்தையைக் காப்பாற்றியது யார் என்ற உண்மை சிசிடிவி காட்சி மூலம் பதிவாகியுள்ளது.

திருவனந்தபுரம்: ஜீப்பிலிருந்து பெண் குழந்தை விழுந்த சம்பவத்தில், குழந்தையைக் காப்பாற்றியது ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பது சிசிடிவி காட்சி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

 

 கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலா வாகனச் சோதனை சாவடி அருகே கடந்த மாதம் ஜீப்பில் பயணித்த பெண் குழந்தை தவறி சாலையில் விழுந்தது. இதையடுத்து குழந்தையைக் காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் கூறிய நிலையில் வனத்துறையினர் குழந்தையை காப்பாற்றியதாகக் கூறப்பட்டது.

 

இந்நிலையில் உண்மையில் சாலையில் கிடந்த குழந்தையைக் காப்பாற்றியது யார் என்ற உண்மை சிசிடிவி காட்சி மூலம் பதிவாகியுள்ளது. அதில், குழந்தையைக் காப்பாற்றியது அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக வனத்துறையினர்  தாங்கள் தான் காப்பாற்றியதாகக்  கூறியதோடு, சிசிடிசி காட்சியை  முழுமையாக வெளியிடாமல் கத்தரித்து வெளியிட்டு மக்களை ஏமாற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது.

baby

குறிப்பாக வனத்துறையினர் குழந்தை தவழ்ந்து வருவது பார்த்து பேய் என்று நினைத்து கொண்டதாகக் கூறப்படுகிறது.