ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்தப்படத்தின் டைட்டில் இதோ!

 

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்தப்படத்தின் டைட்டில் இதோ!

நடிகர் ஜி.வி.பிரகாஷ்- ரைசா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷ்- ரைசா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்வம் தளமயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து `த்ரிஷா இல்லனா நயன்தாரா’ பட இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘காதலைத் தேடி நித்யானந்தா’ எனும் 3டி படத்தில் நடித்து வருகிறார்.

gv and raiza

இந்நிலையில் ஆரா சினிமாஸ் தயாரிப்பில் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். குறும்பட இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் முரட்டு சிங்கிளாக எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

மேலும் தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர் யார் என்றால் அது ஜி.வி.பிரகாஷ் தான். காதல் 100 சதவீதம், குப்பத்து ராஜா, ஜெயில், வாட்ச்மேன் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.