ஜி.வி.பிரகாஷுடன் – சித்தார்த் இணைந்த படத்தின் டைட்டில் இதோ!

 

ஜி.வி.பிரகாஷுடன் – சித்தார்த் இணைந்த படத்தின் டைட்டில் இதோ!

நடிகர் ஜி.வி.பிரகாஷுடன் – சித்தார்த் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் பற்றிய அறிவுப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷுடன் – சித்தார்த் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் பற்றிய அறிவுப்பு வெளியாகியுள்ளது.

சொல்லாமலே’, ‘பூ’ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை எடுப்பதில் வல்லவர் சசி. இவர் கடைசியாக  இயக்கிய விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

அதையடுத்து சித்தார்த், ஜி.வி.பிரகாஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதில் அக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினருக்கும் தங்களின் நிஜவாழ்க்கையோடு பொறுத்தி பார்க்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளாராம்.

siddharth and gv prakash

அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள் நடிக்க, தம்பியாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். லிஜோ மோளுக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார்.இதில் முதன் முறையாக டிராபிக் இன்ஸ்பெக்டராக நடிகர் சித்தார்த் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாகத் துடிப்பான வேடத்தில் பைக் ரேசராக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார். பிரசன்னகுமார் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளராகச் சித்து குமார் அறிமுகம் ஆகிறார்.