ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தற்கு மழைதான் காரணமாம்…. சொல்வது நம்ம நிர்மலா சீதாராமன் தாங்க

 

ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தற்கு மழைதான் காரணமாம்…. சொல்வது நம்ம நிர்மலா சீதாராமன் தாங்க

கடந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தற்கு கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் பெய்த கனமழைதான் காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஜி.எஸ்.டி. வரி நம் நாட்டுக்கு புதியது என்பதால் அதில் உள்ள இடர்பாடுகளை சரிசெய்வதற்காக மத்திய நிதியமைச்சர் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. அந்த கவுன்சில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சந்தித்து ஜி.எஸ்.டி.யில் உள்ள குறைபாடுகளை களைந்து வருகிறது.

ஜி.எஸ்.டி.

பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பரில் மாதத்தில் ஜி.எஸ்.டி. வாயிலான வருவாய் ரூ.92 ஆயிரம் கோடியாக  குறைந்தது. 2018 மார்ச் மாதத்துக்கு பிறகு கடந்த செப்டம்பரில்தான் இந்த அளவுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. 

வாகன விற்பனை மந்தம்

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தற்கு குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், கர்நாடகம், மகாராஷ்டிரா, மற்றும் உத்தரகாண்ட் உள்பட நாட்டின் பல மாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளமே ஜி.எஸ்.டி. வசூல் குறைந்தற்கு காரணம். அதேசமயம் எதிர்பார்த்ததை காட்டிலும் வசூல் குறைந்தற்கான காரணத்தை கண்டுடிபிடிப்பதற்காக வருவாய் துறை ஒரு குழு அமைத்துள்ளது என தெரிவித்தார்.

ஸ்டீல் ஆலை

அதேசமயம் செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தற்கான மற்றொரு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. முக்கியமான 3 துறைகளில் நிலவும் மந்தநிலையும், இறக்குமதி குறைந்ததுமே வருவாய் குறைந்தற்கு காரணம்  கூறப்படுகிறது. தொடர்ந்து 11 மாதங்களாக வாகன விற்பனை சரிவு கண்டுள்ளது. அந்த வகையில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.3,200 கோடி குறைந்தது. அடுத்து சிமெண்ட் மற்றும் ஸ்டீல் துறைகளின் மந்தநிலையால் முறையே ரூ.1,500 கோடி மற்றும் ரூ.1,200 கோடி ஜி.எஸ்.டி. வருவாய் கிடைக்காமல் போய் விட்டது. இதுதவிர இறக்குமதியும் குறைந்ததும் ஜி.எஸ்.டி. வருவாய் சரிவுக்கு முக்கிய காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.