ஜியோ போன் 2 விழாக்கால ஓப்பன் சேல் நவ.5-ஆம் தேதி முதல் தொடக்கம்

 

ஜியோ போன் 2 விழாக்கால ஓப்பன் சேல் நவ.5-ஆம் தேதி முதல் தொடக்கம்

ஜியோ போன் 2 விழாக்கால ஓப்பன் சேல் நவ.5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

மும்பை: ஜியோ போன் 2 விழாக்கால ஓப்பன் சேல் நவ.5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

கடந்த ஆண்டு ஜியோ போன் வெளியிடப்பட்டு பட்ஜெட் போன் அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, அதன் அடுத்த வெர்ஷனான ஜியோ போன் 2’ இந்தாண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. ஜியோ போன் 2’-வில் குவர்டி கீபோர்டு (QWERTY keyboard) அம்சம் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ போன் 2 விழாக்கால ஓப்பன் சேல் நவம்பர் 5-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் முதல் தொடங்குகிறது. இதையடுத்து, நவம்பர் 12-ஆம் தேதி இந்த விழாக்கால சிறப்பு விற்பனை முடிவுக்கு வருகிறது. ஜியோ.காம் (jio.com) இணையதளத்தில் ஜியோ போன் 2 சிறப்பு விற்பனை தொடங்கவுள்ளது.  இதன் விலை ரூ.2,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் வாலட் மூலம் ஜியோ போன் 2 வாங்குபவர்கள் ரூ.200 கேஷ்பேக் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டுயல் நானோ சிம், 2.4 இன்ச் டிஸ்பிளே, 512 எம்.பி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம், 2 எம்.பி ரியர் கேமரா, விஜிஏ செல்ஃபி கேமரா, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், எஃப்.எம் ரேடியோ, 2000 எம்ஏஎச் பேட்டரி ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.