ஜியோ பிராட்பேண்ட் சேவை அறிமுகம் | வாடிக்கையாளர்களுக்கு இலவச தொலைபேசி இணைப்பு

ஜியோ பிராட்பேண்ட் சேவை அறிமுகம் | வாடிக்கையாளர்களுக்கு இலவச தொலைபேசி இணைப்பு

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது ஆண்டு கூட்டத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மனும்,நிர்வாக இயக்குநருமான திரு.முகேஷ் அம்பானி அந்நிறுவனத்தின் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை, தொலைக்காட்சி,தொலைபேசி முதலானவைகளுக்கான கட்டணங்களையும், அறிமுக தேதியையும் அறிவித்தார். 

முகேஷ் அம்பானி இது பற்றி நிர்வாக கூட்டத்தில் பேசும் போது, விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை மக்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஜியோ செட்டப் பாக்ஸ், கேபிள் டிவி சிக்னல்களைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  தவிர, ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி இணைப்பு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரையில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்தியா முழுவதுமாக 15 மில்லியனைத் தொட்டிருப்பதாகவும் தெரிவித்த முகேஷ் அம்பானி, ஒவ்வொரு மாதமும் சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோ இணைப்பிற்கு மாறி வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில், டிஜிட்டல் வசதிகளுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் ரூ.3.5 லட்சம் கோடிகளை முதலீடு செய்திருப்பதாகவும் முகேஷ் அம்பானி அறிவித்தார்.