ஜியோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. அதிருப்தியில் பயனாளர்கள்!

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.. அதிருப்தியில் பயனாளர்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பைபர் வாடிக்கையாளர்களுக்கு செட் டாப் பாக்ஸ் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டிருந்த 650 சேனல்கள் தற்போது நீக்கப்பட்டு வெறும் 150 சேனல்கள் மட்டுமே நேரலையாக ஒளிபரப்பாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பயனாளர்கள் சற்று அதிருப்தியில் இருக்கின்றனர்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டு மாதத்திற்கு முன்பு நடத்திய அறிவிப்புக் கூட்டத்தில், தனது ஜியோ பைபர் சோதனை பயனாளர்களுக்கு புதிய ட்ரிபிள் பிளே பிராட்பேண்ட் சேவை என்ற ஒன்றை அறிவித்தது. இந்த சேவை சோதனை காலம் முடிவுற்ற பிறகு பயன்பாட்டிற்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது. 

jio

ஆனால், தற்போது சோதனைக்காலம் முடிவுறும் ஒரு மாதத்திற்கு முன்பே இந்த ட்ரிபில் பிளே பிராட்பேண்ட் சேவையை ஜியோ பைபர் சோதனை பயனாளர்களுக்கு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஜியோ பைபர் பிரிவியூ சோதனை காலம் முடிவுற்றதாகவும் விரைவில் கட்டண சேவைக்கு மாறும்படியும் பயனாளர்களை ஜியோ நிறுவனம் அறிவுறுத்திள்ளது. சோதனை காலத்திற்கு முன்னரே இதுபோன்று ஜியோ நிறுவனம் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக பயனாளர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர். 

கட்டண சேவைக்கு மாறும் பயனாளர்களுக்கு 4K வசதிகொண்ட செட் டாப் பாக்ஸ் வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ட்ரிபிள் பிளே பிராட்பேண்ட் சேவை ரூபாய் 699 என்ற துவக்க விலையில் இருந்து கிடைக்கிறது. இதனை செலுத்தி பெறுபவர்களுக்கு மட்டுமே இலவசமாக செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும்.

jio

செட் டாப் பாக்ஸ் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பு வைத்திருக்க வேண்டும். தற்சமயம் கிடைத்து இருக்கும் தகவல்களில் வாடிக்கையாளர்கள் கேபிள் டி.வி. இணைப்பின்றி 150 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியும். 

ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் உடன் ஜியோடிவி ஆப் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படாது. இதனால் ஜியோஃபைபர் செட் டாப் பாக்ஸ் கொண்டு ஜியோ டி.வி. செயலியில் உள்ள 650 நேரலை டி.வி. சேனல்களை பார்க்க முடியாது. 

மேலும் இந்த செட்  டாப் பாக்ஸ்-இல் ஜியோ டிவி பிளஸ் என்ற செயலி பிரீ இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் எனவும் ஜியோ நிறுவனம் குறிப்பிட்டு இருந்தது.