ஜியோவை சமாளிக்க புதிய திட்டத்துடன் களமிறங்குகிறது ஏர்டெல்..!

ஜியோவை சமாளிக்க புதிய திட்டத்துடன் களமிறங்குகிறது ஏர்டெல்..!

ஏர்டெல் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய பிளான்களை அறிவித்ததோடு, அத்துடன் காப்பீட்டு திட்டத்தையும் இணைத்திருக்கிறது.

செல்லுலார் நெட்வொர்க் மத்தியில் ஜியோ வரவிற்குப் பிறகு பல நெட்வொர்க்குகள் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டன. இதற்கு முக்கிய காரணம், ஜியோ நிறுவனம் ஆரம்பத்தில் ஆறு மாதத்திற்கு கால்கள், 4ஜி டேட்டா என அனைத்தும் இலவசமாக வழங்கியதே ஆகும். ஒரு ஜிபி டேட்டா 250-க்கும் மேல் விற்கப்பட்டபோது, ஜியோ நெட்வொர்க் வரவினால், படிப்படியாக குறைந்து தற்போது 3ஜிபி 20 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது. 

airtel

மற்ற நெட்வொர்க்குகள் விலையை குறைக்கவில்லை என்றால் சந்தையில் நீடித்திருக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த அதிரடி விலை குறைப்பு நிகழ்த்தியிருக்கிறது. 

ஒரு வருடத்திற்கு பிறகு ஜியோ நிறுவனம் தனது பயனாளர்களுக்கு ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாத மற்றும் ஒரு வருடம் இவற்றின் அடிப்படையில் பிளான்களை அறிவித்தது. ஒரு மாதத்திற்கு சுமார் 150 ரூபாய் செலுத்தினால் போதுமானது. தினமும் ஒரு ஜிபி மற்றும் அன்லிமிட்டட் கால்கள், குறுஞ்செய்தி என அனைத்தையும் வழங்கியது. அதேபோல் மூன்று மாதத்திற்கு (84 மற்றும் 90 நாட்கள்) 350 முதல் 500 ரூபாய் வரை அளவிலான பிளான்களை அறிவித்திருந்தது. இது மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து மற்ற செல்லுலார் நிறுவனங்களும் இதையே பின்பற்றியது. 

குறிப்பாக முதலிடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனம் பெருத்த அடியை சந்தித்த பிறகு தங்களது பிளான்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தது. மூன்று மாதங்களுக்கு 450 முதல் 500 வரையிலான பிளான்களை ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது. 

airtel

தற்போது 3 மாத பிளான்களில் சில மாற்றங்களுடன் புதிய பிளானை அறிவித்திருக்கிறது. 599 ரூபாய் செலுத்தினால் தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டட் கால்கள் மற்றும் தினமும் 100 குறுஞ்செய்திகள் என வழங்குகிறது. மேலும் இத்துடன் 4 லட்சம் ரூபாய் அளவிலான காப்பீட்டு திட்டத்தை தங்களது பயனாளர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் வழங்க இருக்கிறது. மாதாந்திர பிளான்களுடன் காப்பீடு திட்டத்தை அறிவிப்பது இதுவே முதல் முறையாகும். 

பயனாளிகளின் பயன்பட்டிற்கு வந்த பிறகு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்றார்போல் மற்ற பிளான்களிலும் காப்பீடு திட்டத்தை இணைக்க ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.