ஜியோவுக்கு போட்டியாக வோடபோனும் அதிரடி ஆஃபர்!

 

ஜியோவுக்கு போட்டியாக வோடபோனும் அதிரடி ஆஃபர்!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளுடன் புதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதற்குப் போட்டியாக வோடபோனும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சென்னை: ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு அதிரடி சலுகைகளுடன் புதிய திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதற்குப் போட்டியாக வோடபோனும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனமும் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட வேலிடிட்ட கொண்ட ஆஃபரையும், 3 டாப் அப் ரீசார்ஜ் சலுகையையும் அறிவித்துள்ளது.

ரூ.1,699 விலையில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன், தினமும் 100 எஸ்எம்எஸ், 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, வோடபோன் பிளே பயன்படுத்தும் வசதி ஆகியவை வழங்கப்படுகிறது. வோடபோனின் இந்த சலுகை மற்றும் ஜியோவின் ரூ.1,699 சலுகைகளுக்கு போட்டியாக கருதப்படுகிறது. 

மேலும், மூன்று புதிய டாப் அப் ரீசார்ஜ்களையும் அறிவித்துள்ளது. ரூ.50 விலையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39.7 டாக்டைம் வழங்கப்படுகிறது. மற்ற இரு சலுகைகளின் விலை ரூ.100 மற்றும் ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.100 மற்றும் ரூ.500 என்ற இரு சலுகைகளில் முழுமையான டாக்டைம் வழங்கப்படுகிறது