ஜியோவின் அதிரடிக்கு ஈடு கொடுக்க அட்டகாசமான பிளானோடு களம் இறங்குகிறது ஏர்டெல் நிறுவனம்..!?

 

ஜியோவின் அதிரடிக்கு ஈடு கொடுக்க அட்டகாசமான பிளானோடு களம் இறங்குகிறது ஏர்டெல் நிறுவனம்..!?

ஏர்டெல் நிறுவனம் தற்போது பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸுடன் இணைந்து புதிய பிளான் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ அதிரடியாக அறிவித்திருக்கும் ஆஃபர் வாடிக்கையாளர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது! இந்த போட்டியைச் சமாளிக்க இப்போது ஏர்டெல் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்களை வழங்க களம் இறங்கியிருக்கிறது…அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸுடன் இணைந்து புதிய பிளான் ஒன்றை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
 

 ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

இதன்படி ஏர்டல் வாடிக்கையாளர் 599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் கிட்டதட்ட 3 மாதங்களுக்கு (84 நாட்கள்) இணைய சேவை, எஸ்எம்எஸ், கால் அழைப்பு ஆகியவைகளை இலவசமாக பெறலாம். அதாவது ஒரு நாளைக்கு 2 ஜி.பி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் கால்கள் என அனைத்து வசதிகளையும் தந்து வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது ஏர்டல் நிறுவனம். 

இது மட்டுமின்றி கூடுதலாக பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸ் மூலம் 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீட்டிற்கான பாலிசியையும் வழங்குகிறது. 

இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளர்கள் சேறுவதற்கு முதலில் 599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரீசார்ஜ் செய்தவுடன் எஸ்எம்எஸ் ஒன்று உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும். அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நன்றி அப் மூலம் இந்த பாலிசிக்கு விண்ணப்பித்துப் பதிவு செய்துக் கொள்ளலாம்.

இந்த புதிய திட்டமானது ஆண்டின் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட எந்தவொரு நபருக்கும் காப்பீடு வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு  மூன்று மாதங்களுக்கு நாம் சென்று பாலிசியை புதுப்பித்த கொள்ள அவசியமில்லை நாம் ரீசார்ஜ் செய்தால் மட்டும் போதும் இன்சூரன்ஸ் பாலிசியானது தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.

ஏர்டெல்லின் இந்த புதிய பிளான், புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் செயல்பட உள்ளது மற்ற மாநிலங்களில் கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மற்ற வாடிக்கையாளர்களை ஏர்டெல் சேவைக்கு மாற உதவுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.