ஜிம்’ ஒர்க்அவுட்…  ‘ஜம்’ மென்று போடோக்களைப் போட்டு சூடு கிளப்பிய லட்சுமி மஞ்சு

 

ஜிம்’ ஒர்க்அவுட்…  ‘ஜம்’ மென்று போடோக்களைப் போட்டு சூடு கிளப்பிய லட்சுமி மஞ்சு

தமிழில் ‘காற்றின் மொழி’யில் நடித்த லட்சுமி மஞ்சு, ஐந்து ஆண்டுகளில் தனது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டும் சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.அது இப்போது வைரலாகி வருகிறது

தமிழில் ‘காற்றின் மொழி’யில் நடித்த லட்சுமி மஞ்சு, ஐந்து ஆண்டுகளில் தனது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காட்டும் சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.அது இப்போது வைரலாகி வருகிறது

லட்சுமி , w /o  ராம், சந்தமாமா கதலு, காற்றின் மொழி  போன்ற திரைப்படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி  தெலுங்கு சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக இருப்பவர்  லட்சுமி மஞ்சு. ஒவ்வொரு முறையும் தனது அடையாளத்தை 70 எம்எம் திரையில் நிலைநிறுத்திவிட்டு   வெளியேறத் தவறவில்லை! 

lakshmi

இந்த ஆண்டு அவருக்கு எந்த படமும்  இல்லை என்றாலும், சமூக ஊடகங்களில், குறிப்பாக அவரது ஒர்க்அவுட் செய்யும்  தனது சிஸ்லிங் படங்களுடன் இணையத்தை பரபரப்பாக்கி   வருகிறார். சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் லட்சுமி, தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொள்வதன் மூலம்  தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இருப்பினும், அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் போட்டோ , ஐந்து ஆண்டுகளில் அவரது  உருமாற்றப் படம்   அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. லட்சுமி டிசம்பர் 2014 மற்றும் டிசம்பர் 2019 முதல் தனது படத்தின் ஒரு படத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார், அதில் நியான் பிங்க் சட்டை அணிந்த லட்சுமி  உடல் ரீதியாக மகிழ்ச்சியாக   இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

lakshmi

அவர் உடற்பயிற்சி செய்யும் போட்டோவைப் பார்த்து உடனே நமக்கும் ஜிம்முக்கு போகலாம் போல இருக்கே என்கிற அளவுக்கு அவ்வளவு ஃபிட் மட்டுமல்ல : ஹாட்டும் கூட!  சினிமா வாய்ப்புகள் இல்லாத இந்த ஐந்து வருடங்களுக்குள் அவருக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அவர் போட்டோக்கள் மூலமாக சமூகத்துக்கு சொல்லியிருக்கிறரர்.

‘கட்டான  உடலை அடைய ஒருவர் நல்ல உணவு, நல்ல உடற்பயிற்சி மற்றும் நல்ல எண்ணங்களைப் பின்பற்ற வேண்டும்’ தனது ரசிகர்களுக்கு ஃபிட்னெஸ் ரகசியமும் ‘ஜொள்’ளியிருக்கிறார்… மன்னிக்கணும்,சொல்லியிருக்கிறார்.