ஜிமெயில் ஆண்ட்ராய்டு ஆப்-இல் புத்தம் புதிய ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் அறிமுகம்

 

ஜிமெயில் ஆண்ட்ராய்டு ஆப்-இல் புத்தம் புதிய ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் அறிமுகம்

ஜிமெயில் ஆண்ட்ராய்டு ஆப்-இல் புத்தம் புதிய ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலிபோர்னியா: ஜிமெயில் ஆண்ட்ராய்டு ஆப்-இல் புத்தம் புதிய ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் ஆப்-இல் பல்வேறு புதிய மாற்றங்களை செய்திருந்தது. அதாவது இன்பாக்ஸ் அம்சத்தில் புதிய வசதிகள் இடம்பெற்றன. அத்துடன் 2018 டெவலப்பர் நிகழ்வில் கூகுள் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை அறிமுகம் செய்தது. இதில் மூன்று ஆப்ஷன்கள் மூலமாக மின்னஞ்சல்களுக்கு வேகமாக பதில் அளிக்க முடியும். செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் மூலமாக ஜிமெயிலின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் செயல்படுகிறது. அதனால் இனி மிகவேகமாக மின்னஞ்சல்களை எழுத முடியும்.

எவ்வாறு எனில் மின்னஞ்சல்களை டைப் செய்யும்போது மெஷின் லேர்னிங் தொழில்நுட்பமானது பொருத்தமான வார்த்தைகளை பரிந்துரைக்கும். முதலில் ஜிமெயில் இணையதளத்திற்கு இந்த ஸ்மார்ட் கம்போஸ்  அம்சம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது ஜிமெயில் ஆண்ட்ராய்டு ஆப்-இல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கூகுளின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இந்த ஸ்மார்ட் கம்போஸ் வசதி பிரத்யேகமாக வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் வழங்கப்படுகிறது. அப்டேட் செய்யப்பட்ட ஜிமெயில் ஆப்-ஐ தங்கள் ஸ்மார்ட்போன்களில் வைத்திருப்போர் ஸ்மார்ட் கம்போஸ் பட்டனை ஜிமெயில் கணக்கில் செயல்படுத்தலாம். ஜிமெயில் ஆப்இல் மெனுவில் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்த பின்பு, இனி அக்கவுண்ட்களில் ஒன்றை  க்ளிக் செய்து ஸ்மார்ட் கம்போஸ் வசதியை செயல்படுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து இனி மின்னஞ்சல்களை டைப் செய்யும்போது ஸ்மார்ட் பரிந்துரைகளை பார்க்க முடியும்.