ஜிப்ஸி படத்தில் உ.பி. முதலமைச்சரை கொச்சைப்படுத்தியுள்ளனர் –  இந்து முன்னணி கட்சி

 

ஜிப்ஸி படத்தில் உ.பி. முதலமைச்சரை கொச்சைப்படுத்தியுள்ளனர் –  இந்து முன்னணி கட்சி

ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜிப்ஸி படம் சென்சார் போர்டின் முட்டுக்கட்டைகளால் கடந்த பல நாட்களுக்கு பின் தற்போதுதான் வெளியாகியுள்ளது. சாலை பயணங்களில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு அரசியல் விஷயங்களை முன்னிலைப்படுத்தி ஜிப்ஸி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜிப்ஸி படம் சென்சார் போர்டின் முட்டுக்கட்டைகளால் கடந்த பல நாட்களுக்கு பின் தற்போதுதான் வெளியாகியுள்ளது. சாலை பயணங்களில் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு அரசியல் விஷயங்களை முன்னிலைப்படுத்தி ஜிப்ஸி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் படம் என்பதால் அரசியல் விமர்சனம் இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டம், ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமியர்கள்- இந்துக்களுக்கிடையேயான உறவு குறித்து பேசுகிறது ஜிப்ஸி.

gypsy movie

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், “சென்சார் போர்ட் கத்தரித்த காட்சிகள் யூ டூபில் எப்படி வந்தது? படத்தில் உத்திரபிரதேச மாநில முதலமைச்சரை கொச்சைப் படுத்தி உள்ளனர். சினிமாத் துறையிலும் நக்சலைட் ஊடுருவியுள்ளனர். அதே போல இந்துமுன்னணி கோவையில் அறிவித்த  கடையடைப்பு அறிவிப்பை தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகள் கடை அடைப்பை அறிவுத்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் கலவரம் செய்திடும் நோக்கம் தெரிகிறது. இது குறித்து உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்” என தெரிவித்தார்.