ஜிப்ஸியின் ‘தேசாந்திரி’ பாடல் வெளியீடு

ஜிப்ஸியின் ‘தேசாந்திரி’ பாடல் வெளியீடு

’குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கியிருக்கும்  திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார்.ஜோக்கர் படத்தில் ‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்று கேட்டு மத்திய, மாநில  அரசுகளை திக்குமுக்காடச் செய்தார் ராஜு முருகன்.

மதவெறி, சாதிவெறி, பதவி வெறிகளை ஆட்டம் காண வைக்கும் வகையில், அடுத்த படமான ஜிப்ஸியிலும் பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேசிய அளவில் சர்ச்சைக்குரிய பல பிரச்சினைகளை  கொண்டுள்ள  நிகழ்கால அரசியலை  தோலுரித்து காட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி வெளியான  இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

ஜிப்ஸி ‘தேசாந்திரி’ என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை சித்தார்த், சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர். 4 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த பாடலில் பாலைவனம், மலைப்பிரதேசம், சமவெளி, வட இந்தியா, தென்னிந்தியா என இந்தியாவின் நிலப்பரப்பும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது.