ஜின் ஜியோமெங்: இது பெண்ணல்ல செய்தி வாசிக்கும் ரோபோ

 

ஜின் ஜியோமெங்: இது பெண்ணல்ல செய்தி வாசிக்கும் ரோபோ

ஜின் ஜியோமெங் எனும் செயற்கை நுண்ணறிவு முறையில் தயாரிக்கப்பட்ட பெண் ரோபோவை செய்தியாளராக அறிமுகம் செய்துள்ளது சீன தேசம்

ஜின் ஜியோமெங் எனும் செயற்கை நுண்ணறிவு முறையில் தயாரிக்கப்பட்ட பெண் ரோபோவை செய்தியாளராக அறிமுகம் செய்துள்ளது சீன தேசம்.

செயற்கை நுண்ணறிவு முறையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் சீனா, ஜின் ஜியோமெங் எனும் பெண் ரோபோவை தயாரித்து செய்தியாளராக அறிமுகம் செய்திருக்கிறது. அசலில் பெண் போல இருக்கும் இந்த ரோபோ, பெண்ணைப் போலவே முக பாவங்கள் செய்யக்கூடியது. சீனாவின் சின்ஹூவா தொலைக்காட்சி நிறுவனம் கடந்த ஞாயிறன்று இந்த ரோபோ செய்தி வாசிக்கும் ஒரு நிமிட வீடியோவை வெளியிட்டது.