ஜின்பிங் வருகை ! சீன பாதுகாப்பு அதிகாரிகள் வளையத்தில் சென்னை !

 

ஜின்பிங் வருகை ! சீன பாதுகாப்பு அதிகாரிகள் வளையத்தில் சென்னை !

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் மாமல்லபுரம் வருகையை ஒட்டி 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங் மாமல்லபுரம் வருகையை ஒட்டி 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் 2 நாட்கள் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அக்டேபார் 11ம் தேதி பிரதமர் வருகிறார்.  பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்கிறார் மோடி.

தனி விமானத்தில் வரும் சீன அதிபர் ஜின் பிங், கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இதையொட்டி விமான நிலையத்தில் இருந்து கிண்டி ஓட்டல் வரையிலான தூரத்தில் வாகன அணிவகுப்பு நடைபெற்றது.

கிண்டி ஓட்டலில் ஜின் பிங் தங்குவதை ஒட்டி, அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜின் பிங்கிற்கான பாதுகாப்பு ஏற்பாட்டை சீன நாட்டு அதிகாரிகளே பார்த்துக் கொள்கின்றனர்.

police

மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்கள்கிண்டி நட்சத்திர ஓட்டலில் ஜின் பிங் உணவருந்துகிறார். இதற்காக அவரது பிரத்யோக சமையல்காரர்கள் சீனாவில் இருந்து வந்துள்ளனர். சீன பாதுகாப்பு படையினரின் மேற்பார்வையில் அவர்கள் தான் ஜின் பிங்கிற்கான உணவை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் இருவருக்குமே செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஒத்திகை சிறப்பாக நடைபெற்றுள்ளது. விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதை நெடுகிலும் சுமார் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரத்தில் தலைவர்கள் பேச்சுவார்த்தை ஒட்டி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல பிரதமர் மோடி தங்கும் கோவளம் நட்சத்திர ஓட்டலில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவளம் மற்றும் மாமல்லபுரத்தில் இருந்து 2 நாட்டிகல் மைல் தூரம் கடலோர காவல் படையின் மூன்று கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.

securityvehicl