ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்: சித்தார்த் கேரக்டரில் நடிக்கும் ‘நயன்தாரா தம்பி’!

 

ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்: சித்தார்த் கேரக்டரில் நடிக்கும் ‘நயன்தாரா தம்பி’!

ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். 

சென்னை: ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். 

மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஜிகர்தண்டா

jigarthanda ttn

கடந்த 2014-ம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்  வெளியான திரைப்படம்  ‘ஜிகர்தண்டா’. காமெடி கேங்ஸ்டர் படமான இதில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்தப் படத்துக்கு, கேவ்மிக் யு ஆரி ஒளிப்பதிவு செய்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

பேட்ட உருவாகக் காரணமாக இருந்த ஜிகர்தண்டா

jigarthanda

இப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், ரஜினியை மனதில் வைத்து எழுதப்பட்ட கதை இது என்று கூறியதும், முன்பே சொல்லியிருந்தால் நானே இந்தப் படத்தில் நடித்திருப்பேன் என ரஜினி கூறினார். இந்த படத்தின் மீதான ரஜினியின் ஈர்ப்பு தான் அவரை பேட்ட யில் நடிக்க வைத்தது என்று கூட சொல்லலாம்.  அந்த அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், 35 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. அத்துடன் 2 தேசிய விருதுகளையும் வென்றது. சிறந்த துணை நடிகருக்கான விருதை பாபி சிம்ஹாவும், சிறந்த எடிட்டருக்கான விருதை விவேக் ஹர்ஷனும் பெற்றனர்.

சித்தார்த் கேரக்டரில் அதர்வா 

jigarthanda

இந்நிலையில், இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ள இந்தப் படத்தில், பாபி சிம்ஹா கேரக்டரில்  வருண் தேஜும், சித்தார்த் கதாபாத்திரத்தில் நாக செளரியா அல்லது ராஜ் தருண் நடிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது சித்தார்த் கேரக்டரில் நடிக்க நடிகர் அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். இதன்  மூலம் அதர்வா தெலுங்கு திரையுலகில் முதன்முறையாகக் காலடி எடுத்து வைக்கவுள்ளார். 

ஜொலிக்கும் நட்சத்திர பட்டாளம்

hansika

வால்மீகி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கவுள்ளார். இவர்களுடன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ராதாரவி, ஊர்வசி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணையவுள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனம் 14 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.  தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10 முதல் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அது இருக்கட்டும். தலைப்பில் ஏன் நயன்தாராவின் தம்பி என்று குறிப்பிட்டோம் என்ற சந்தேகம்  எழுகிறதா? நடிகர் அதர்வா நடிகை நயன்தாராவின் தம்பியாக இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அது மட்டுமல்லாமல், இப்படத்திற்கு பிறகு நயன்தாராவை அவர் அக்கா என்றே அழைக்கிறாராம். இப்போது புரிகிறதா? இந்த தலைப்பிற்கான அர்த்தம்!

இதையும் வாசிக்க: OPS: ஒங்கள போடணும் சார் – அரசியல் நையாண்டி போஸ்டர்