ஜிஎஸ்டி தாக்கலுக்கு இன்றே கடைசி! மக்கர் செய்யும் இணையதளம்!

 

ஜிஎஸ்டி தாக்கலுக்கு இன்றே கடைசி! மக்கர் செய்யும் இணையதளம்!

இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இரண்டாண்டுகளைக் கடந்த பின்பும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இன்று வரையில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி படிவங்களை அந்த மாதத்தின் 19 மற்றும் 20 தேதிகளில் இணையதளத்தின் மூலமாக சமர்பிக்க வேண்டும்.

இந்தியா முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியை கடந்த 2017ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இரண்டாண்டுகளைக் கடந்த பின்பும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இன்று வரையில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி படிவங்களை அந்த மாதத்தின் 19 மற்றும் 20 தேதிகளில் இணையதளத்தின் மூலமாக சமர்பிக்க வேண்டும். இந்நிலையில், நேற்று ஜிஎஸ்டி படிவங்களை இணையதளத்தில் பதிவேற்ற பலரும் முயன்ற போது, ஜிஎஸ்டி போர்டல் செயலிழந்து கைவிரித்தது.

gst

இதனால் பலரும் செய்வதறியாது திகைத்தனர். இன்று கடைசி நாளாக இருக்கும் நிலையில், நேற்று முழுவதும் ஜிஎஸ்டி இணையதளம் செயல்படவில்லை. இது குறித்து பலரும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு, காலகெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர். இருந்த போதிலும் காலக்கெடு நீட்டித்து இதுவரையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
ஜிஎஸ்டி ஆர் -3 பி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நேற்று ஜிஎஸ்டி இணையதளத்தில் நுழைய முற்பட்ட போது, ஜிஎஸ்டி போர்டலை திறந்ததும், ’
‘இங்கு சில பிரச்சினைகள் உள்ளது. தடங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் பொறுமை பாராட்டத்தக்கது’ என்கிற வாக்கியங்கள், வரி செலுத்த முயன்றவர்களை தொடர்ந்து எரிச்சலடைய செய்துக் கொண்டிருந்தது. 

ஜிஎஸ்டி ஆர்-3 படிவத்தை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி தேதியாக இருக்கும் நிலையில், இந்த பிரச்சனையைக் காரணம் காட்டி, காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதுதொடர்பாக அரசு எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒவ்வொரு மாதமும் 19, 20 தேதிகள் எங்களுக்கு மிக மோசமான நாளாகவே இருந்து வருகிறது என்று பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர்.