ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக வருத்தம் தெரிவித்தது பிரிட்டன்!

 

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக வருத்தம் தெரிவித்தது பிரிட்டன்!

ரத்தமும் கண்ணீரும் கலந்தது இந்திய சுதந்திர போராட்டம். அவற்றில் மாறாத வடுவாக இன்றும் இருப்பது ஜாலியன் வாலாபாக் படுகொலை. இந்திய சரித்திரத்தின் முகத்தில் கருப்பு மை பூசிய அந்நிகழ்வு கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அரங்கேறியது

லண்டன்: ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு 100 ஆண்டுகளுக்கு பின்னர் வருத்தம் தெரிவித்துள்ளது பிரிட்டன் அரசு.

ரத்தமும் கண்ணீரும் கலந்தது இந்திய சுதந்திர போராட்டம். அவற்றில் மாறாத வடுவாக இன்றும் இருப்பது ஜாலியன் வாலாபாக் படுகொலை. இந்திய சரித்திரத்தின் முகத்தில் கருப்பு மை பூசிய அந்நிகழ்வு கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அரங்கேறியது. வெள்ளை காலனியாதிக்கத்தால் ஏவி விடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் அப்பாவி மக்களின் உயிர்களை கொன்று குவித்தது.

jallianwala bagh

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில், சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு 400 மீட்டர் தொலைவில்  உள்ள ஜாலியன் வாலாபாக் என்ற பூங்காவில், ‘பைசாகி’ திருவிழாவைக் கொண்டாட சுற்றுவட்டார பகுதி மக்கள் திரண்டனர். அதற்கு முனதாக, முறையான அனுமதியின்றிப் போராட்டம் நடத்தக் கூடாது என்ற உத்தரவை பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர் பிறப்பித்திருந்தார்.

jallianwala bagh

ஆனால், அந்த உத்தரவு குறித்து பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் கைகளில் ஆயுதங்கள் எல்லாம் இருக்கவில்லை. அங்கு கூடியிருந்த சுமார் 15,000-க்கும் மேற்பட்டோர், திருவிழாவை கொண்டாட வந்தவர்கலாகவோ, அரசியல் உரைகளை கேட்க வந்தவர்களாகவோ அல்லது பூங்காவில் சில மணி நேரங்கள் செலவிடவோ வந்தவர்கள். அக்கூட்டத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் என அனைவரும் இருந்தனர்.

jallianwala bagh

அது என்ன நிகழ்ச்சி என்பதைக் கூடத் தெரிந்துகொள்ள விரும்பாத ஜெனரல் டயர், மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்காமல், துப்பாக்கிச் சூடு நடத்த ஆணையிட்டார். அந்த மைதானத்தின் நான்கு பக்கமும் மதில் சுவர். உள்ளே செல்ல ஒரே ஒரு சின்ன பாதை மட்டுமே. அதிலும், காவலர்களும், குண்டுகள் நிரப்பிய பீரங்கிகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த இடத்திலிருந்து மக்களால் தப்பிக்க முடியவில்லை.

jallianwala bagh

டயரின் ஆணைப்படி, ஒரே சமயத்தில் 90 துப்பாக்கிகள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. சுமார் 1,650 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூடை நிறுத்த உத்தரவிட்டபோது, ஜாலியன்வாலாபாக் மைதானம், இறந்த உடல்களால் நிறைந்திருந்த போர்களம் போல காட்சியளித்தது. இதில் சிக்கி 379 பேர் உயிரிழந்ததாகவும், 1,137 பேர் காயமடைந்ததாகவும் கூறியது அப்போதைய வெள்ளை ஆதிக்க அரசு. ஆனால், உண்மையில் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

இந்த சம்பவத்துக்கு பிரிட்டன் முறையாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக குரல்கள் எழுந்து வந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சி தரூர் உள்ளிட்டோர் இந்த கோரிக்கைகளை தொடர்ந்து முன் வைத்து வந்தனர்.

theresa may

இந்நிலையில், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பிரிட்டன் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரசா மே ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்தார். படுகொலைக்கும் அதனால் ஏற்பட்ட துயரங்களுக்கும் வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க

சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட புதிய ரயில் பாதை இலங்கையில் திறப்பு!