ஜார்க்கண்ட் தேர்தல்: பா.ஜ.கவை விட 24 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி !

 

ஜார்க்கண்ட் தேர்தல்: பா.ஜ.கவை விட 24 இடங்களில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி !

தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே, தேர்தலின் பிந்தைய கருத்துகள் ஆட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்பட்டது. 

ஜார்க்கண்ட்டில் 81 தொகுதிகளில்  5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதன் முதல் பா.ஜ.க வை விட காங்கிரஸ் கூட்டணி சில இடங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தது. காலை சுமார் 11 மணி அளவில் இரண்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்னரே, தேர்தலின் பிந்தைய கருத்துகள் ஆட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்பட்டது. 

TTN

அதே போல, பா.ஜ.க பல இடங்களில் தோல்வி அடைந்து பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரத்தின் படி பா.ஜ.க 23 இடங்களிலும் காங்கிரஸ் மற்றும் ஜே.எம்.எம் கூட்டணி 47 இடங்களிலும் மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜகவை விட 24 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. அதனால், தேர்தல் பிந்தைய கருத்துகளின் படி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ttn

இதனால், காங்கிரஸ் மக்கள் பட்டாசு வெடித்து மேள தாளங்களுடன் கொண்டாடி வருகின்றனர். பெரும்பான்மைக்கு தேவையான 41 இடங்களை விட காங்கிரஸ் கூட்டணி அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.