ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்..பெரும்பான்மையைப் பிடித்தது காங்கிரஸ் கூட்டணி !

 

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்..பெரும்பான்மையைப் பிடித்தது காங்கிரஸ் கூட்டணி !

இன்று காலை முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியுள்ளன. நண்பகலுக்குள் எந்த கட்சி முன்னணியில் உள்ளது என்பதன் நிலவரம் தெரிந்து விடும்.

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில் 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா( ஜே.எம்.எம்) மற்றும் இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இன்று காலை முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியுள்ளன. இன்று நண்பகலுக்குள் எந்த கட்சி முன்னணியில் உள்ளது என்பதன் நிலவரம் தெரிந்து விடும். வாக்கு எண்ணப்படும் அனைத்து மையங்களிலும்  துணை ராணுவப் படையினர், ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ttn

தற்போதைய நிலவரத்தின் படி, பா.ஜ.க 28 இடங்களிலும் , காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களிலும், மற்ற கட்சிகள்  11 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பெரும்பான்மையை நிரூபிக்க 42 இடங்களிலே முன்னிலை வகிக்க வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.