ஜாமீனில் வெளிவராதபடி டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட்!

 

ஜாமீனில் வெளிவராதபடி  டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்ட்!

இந்த பிடிவாரண்ட் கலவாதியாகிவிட்டதாக மீண்டும் அரசுத்தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்  பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 சென்னை மழைவெள்ளத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் கொடுத்த  நிவாரண பொருட்களை ஆளும் அதிமுக அரசு கொள்ளையடித்து வருவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து தமிழக அரசு டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தது. 

ttn

இந்த வழக்கில் நீதிபதி செல்வகுமார் , டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக கடந்த 2016ஆம் ஆண்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவாரண்ட் கலவாதியாகிவிட்டதாக மீண்டும் அரசுத்தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

tn

இந்நிலையில் டிராஃபிக் ராமசாமிக்கு எதிராக பிணையில் வெளியில் வரமுடியாத படி நீதிபதி, புதிய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதனால்   டிராஃபிக் ராமசாமி கைதுசெய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.