ஜாமீனில் வெளிவந்தார் ஹீலர் பாஸ்கர்!

 

ஜாமீனில் வெளிவந்தார் ஹீலர் பாஸ்கர்!

யூ டியூப் பிரபலமான ஹீலர் பாஸ்கர் சமீபத்தில் வீட்டிலேயே சுயபிரசவம் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்

யூ டியூப் பிரபலமான ஹீலர் பாஸ்கர் சமீபத்தில் வீட்டிலேயே சுயபிரசவம் செய்ய இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். இதே போல கொரோனா வைரஸ் தொடர்பாக வதந்தியை பரப்பி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஹீலர் பாஸ்கர். 

healer baskar

கடந்த சில நாட்களுக்கு முன் நோய் பாதிப்பு இல்லாதவர்களை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று தனிமைப்படுத்தப்பட்டு ஊசி போட்டு கொலை செய்யப்போகின்றனர் என்பது போல ஒரு வீடியோவை ஹீலர் பாஸ்கர் வெளியிட்டார். ஹீலர் பாஸ்கரை கைது செய்ய சமூகவலைதளங்களில் எழுந்த கோரிக்கையை அடுத்து, அவர் கடந்த 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் கோவை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.