ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள்…. ஒரே வாரத்துக்குள் 3வது சம்பவம்

 

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்கள்…. ஒரே வாரத்துக்குள் 3வது சம்பவம்

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தோடு சேர்த்து டெல்லியில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்றபடியே மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியது போது அந்த பகுதியில் இருந்த மாணவர் அர்ஷான் அபாக் இது குறித்து கூறுகையில், கேட் நம்பர் 5 பகுதியில் முதலில் சுட்டார்கள். அதன் பிறகு கேட் நம்பர் 1 பகுதியில் துப்பாக்கியால் சுட்ட சத்தத்தை நாங்கள் கேட்டோம். இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பில்லை, சூழ்நிலை பதற்றமாக உள்ளது. அந்த வாகனத்தின் எண்ணை நாங்கள் குறித்து வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

ஜாமியா பகுதி

அதேசமயம் ஜாமியா பல்கலை பாதுகாவலர்கள் கூறுகையில், இரண்டு பேர் ஸ்கூட்டியில் ஓக்லாவிலிருந்து ஜூல்லெனாவை நோக்கி சென்றனர். அவர்கள் முதலில் கேட் நம்பர் 6 பகுதியில் சுட்டதாகவும், பின் கேட் நம்பர் 1 பகுதியில் சுட்டதாகவும்  தெரிவித்தனர். துப்பாக்கி சூடு சம்பவம தொடர்பாக புகார் கொடுப்பதற்காக மாணவர்கள் உள்பட ஏராளமானோர் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையம் முன்பு திரண்டனர். 

ஜாமியா பகுதியில் திரண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்

இந்த சம்பவம் குறித்து கூடுதல் டி.சி.பி. (தென்கிழக்கு) குமார் ஞானேஷ் கூறுகையில், ஜாமியா நகர் காவல்நிலைய தலைமை அதிகாரி தனது குழுவுடன் சம்பவ இடத்துக்கு  சென்று அந்த பகுதியில் வெற்று புல்லட் குண்டுகள் கிடக்கிறதாக என  தேடினார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.  மேலும் குற்றவாளிகள் வந்த வாகனம் குறித்து முரண்பாடான கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சில ஸ்கூட்டர் என்றும் சிலர் அது நான்கு சக்கர வாகனம் என்றும் சொன்னார்கள் என தெரிவித்தார். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகில் துப்பாக்கி சூடு சம்பவத்தோடு சேர்த்து டெல்லியில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.