ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் – வெளியானது சிசிடிவி ஆதாரம்

 

ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் – வெளியானது சிசிடிவி ஆதாரம்

ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்திய காட்சிகள் கொண்ட சிசிடிவி ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் நடத்திய காட்சிகள் கொண்ட சிசிடிவி ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாக போராட்டம் நடத்தினார்கள். மேலும் டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றார்கள். இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நடந்தபோது, அங்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அதேபோல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி டெல்லி ஜாமியா பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்தில் நுழைந்து போலீசார் படிக்கின்ற மாணவர்களின் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதனை காவல்துறை தொடர்ந்து மறுத்து வந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நூலகத்துக்குள் நுழைந்த போலீசார் அமைதியாக படித்துக் கொண்டிருந்த மாணவர்களை லத்தியால் கடுமையாக தாக்கும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளன.