ஜாக்டோ ஜியோ போராட்ட எதிரொலி: மேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பென்ட்; தமிழக அரசு அதிரடி

 

ஜாக்டோ ஜியோ போராட்ட எதிரொலி: மேலும் 600 ஆசிரியர்கள் சஸ்பென்ட்; தமிழக அரசு அதிரடி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மேலும் 600 பேரை சஸ்பென்ட் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மேலும் 600 பேரை சஸ்பென்ட் செய்து தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்திருந்தும் அவர்களது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அரசு ஊழியர்களின் இந்த போராட்டம் 8-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற அக்கறை இல்லாமல் தமிழக அரசு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தி வருவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மற்றும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மேலும் 600 பேரை சஸ்பென்ட் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வாரம் 447 ஆசிரியர்களை சஸ்பென்ட் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இது வரை தமிழக அரசு சஸ்பென்ட் செய்துள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1047-ஆக உயர்ந்துள்ளது. மேலும், சஸ்பென்ட் நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களின் பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்கள் மூலமாக நிரப்பப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.