ஜஸ்ட் மிஸ்… ! வெடிகுண்டுகளை ஏலம் விட இருந்த ரயில்வே!

ஜஸ்ட் மிஸ்… ! வெடிகுண்டுகளை ஏலம் விட இருந்த ரயில்வே!

ராணுவத்தின் பெயரால் ரயிலில் வெடிகுண்டுகளை அனுப்பியது யார் என்கிற மர்மம் இரண்டு துறைகளையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.கடந்த ஏப்ரல்  மாதம்  மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரசில் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஒரு பார்சல் வந்தது.அனுப்பியது இந்திய ராணுவம்.

xpresss

ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்ட அந்தப் பார்சல் கடந்த அக்டோபர் வரை யாராலும் உரிமை கோரப்படாமலே கிடந்ததால் அதை கிடங்குக்கு அனுப்பியது ரயிவே நிர்வாகம். அதன்பிறகு அந்தப் பார்சலை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. ராணுவம் அனுப்பிய பார்சல் என்பதால் வெடிகுண்டு நிபுணர்கள் முன்னிலையில் பார்சல் பிரிக்கப்பட்டது.அதன் உள்ளே பயிற்சியின் போது ராணுவத்தினர் பயன்படுத்தும் பத்து கையெறி குண்டுகள் இருந்தன. அதிர்ந்து போன ரயிவே அதிகாரிகள் ஏலம் விடும் திட்டத்தைக் கைவிட்டு அந்த வெடிகுண்டுகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினர். ரயில்வே போலீசாரின் விசாரணையில் சில விசயங்கள் வெளிவந்தன.

express

அந்தமானில் இருக்கும் இந்திய ராணுவத்தின் 72-வது படையணியின் பயிற்சிக்காக நாக்பூரில் இருந்து இந்த வெடிகுண்டு பார்சல் ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பப் பட்டு இருக்கிறது. சென்னையில் உள்ள 172-வது படையணி இதை டெலிவரி எடுத்து அந்தமான் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அந்த படையணி இதுவரை இந்தப் பார்சலைப் பெற்றுச்செல்ல வரவில்லை.இதையடுத்து தாமத கட்டணமாக 7000 ரூபாய் அபராதத்துடன் தாங்களே எடுத்துச் சென்று ஒப்படைக்க முடிவெடுத்த நிலையில் இன்னொரு அதிர்ச்சி செய்தி வெளிவந்து இருக்கிறது.வெடிகுண்டுக

cental

வெடிகுண்டுகளை ரயிலில் அனுப்பும் பழக்கம் ராணுவத்துக்கு இல்லை.இப்படி ஒரு பார்சல் அனுப்பட்டு இருப்பதாக எங்களுக்கு நாக்பூரில் இருந்து எந்தத் தகவலும் இல்லை,எனவே இந்த பார்சலுக்கும் இந்திய ராணுவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சென்னை ராணுவத்தினர் தெரிவித்து இருக்கிறார்கள். பத்து டம்மி கையெறி குண்டுகளின் மர்மம் இன்னும் தொடர்கிறது.