ஜவுளிச் சந்தையில் படுஜோராய் விற்பனையாகும் ஐயப்ப பக்தா்கள் ஆடைகள்!

 

ஜவுளிச் சந்தையில் படுஜோராய் விற்பனையாகும் ஐயப்ப பக்தா்கள் ஆடைகள்!

தமிழகத்தில் பொருளாதார மந்தநிலையில் நிலவி வருவதாக கடந்த இரண்டு, மூன்றாண்டுகளாகவே கருத்து நிலவி வருகிறது. குறிப்பாக இந்த வருடம் ஆடி மாதத்திலும், தீபாவளி பண்டிகை விற்பனையிலும் ஜவுளி சந்தையில் விற்பனை படு மந்தமாகவே இருந்து வந்தது. தீபாவளி பண்டிகை சீசன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் ஜவுளி சந்தையில் வியாபாரம் இன்னும் மந்த நிலையிலேயே இருந்து வந்தது.

தமிழகத்தில் பொருளாதார மந்தநிலையில் நிலவி வருவதாக கடந்த இரண்டு, மூன்றாண்டுகளாகவே கருத்து நிலவி வருகிறது. குறிப்பாக இந்த வருடம் ஆடி மாதத்திலும், தீபாவளி பண்டிகை விற்பனையிலும் ஜவுளி சந்தையில் விற்பனை படு மந்தமாகவே இருந்து வந்தது. தீபாவளி பண்டிகை சீசன் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் ஜவுளி சந்தையில் வியாபாரம் இன்னும் மந்த நிலையிலேயே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், மகர ஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து ஜவுளி சந்தைகளில் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது.

dress

குறிப்பாக, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் மொத்த விற்பனை சந்தையில் ஐயப்ப பக்தர்கள் அணியும் ஆடைகள் வழக்கத்தை விட அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் கருப்பு, காவி, நீலம் வண்ணங்களில் வேட்டி, துண்டுகளையும், சட்டைகளையும்,  இருமுடி கட்டும் பைகளையும் அதிகளவில் கொள்முதல் செய்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.