ஜவுளிக் கடையை திறக்கச் சென்ற 3 பேர்.. எதிரே வந்த வாகனம் மோதி பரிதாப உயிரிழப்பு!

 

ஜவுளிக் கடையை திறக்கச் சென்ற 3 பேர்.. எதிரே வந்த வாகனம் மோதி பரிதாப உயிரிழப்பு!

கடைகள் அடைக்கப்பட்டதால் இவர்கள் சொந்த ஊரில் கடந்த 40 நாட்களாக இருந்து வந்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கப்பல் வாடி கிராத்தில் வசித்து வந்த விக்னேஷ் (22) மற்றும் குப்பன் (60) சென்னசெட்டி (70) ஆகிய மூன்று பேரும் பெங்களூரில் ஜவுளிக் கடை நடத்தி வந்தனர். இவர்கள் 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாம். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டதால் இவர்கள் சொந்த ஊரில் கடந்த 40 நாட்களாக இருந்து வந்துள்ளனர். 

தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டு, சிறு, தனிக்கடை வைத்திருப்பவர்கள் கடைகளை திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளதால், மீண்டும் கடையை திறக்க அதிகாலை 3 மணி அளவில் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும் சென்றுள்ளனர்.

ttn

இவர்கள் கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலையில் செட்டிபள்ளி என்னும் இடத்தின் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அந்த அடையாள தெரியாத வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.