ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு கார், பைக் வேண்டாம் ! நாட்டுப் பசுமாடு போதும் !

 

ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு கார், பைக் வேண்டாம் ! நாட்டுப் பசுமாடு போதும் !

ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெறுபவர்ளுக்கு நாட்டுப் பசுமாடுகளை பரிசாக வழங்கவேண்டும் என விழா கமிட்டியினருக்கு ஜல்லிக் கட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெறுபவர்ளுக்கு நாட்டுப் பசுமாடுகளை பரிசாக வழங்கவேண்டும் என விழா கமிட்டியினருக்கு ஜல்லிக் கட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டதை அடுத்து ஜல்லிக் கட்டு வீரர்கள், தங்கள் காளைகளுடன் ஆவலுடன் போட்டியை எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுத்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நாட்டு மாடுகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்று பெறும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகளாக கார், பைக், டிவி, பீரோ வழங்குவதற்கு பதில் நாட்டுமாடுகளை பரிசாக வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் விடுக்கும் கோரிக்கை தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுப்போராட்டம், வெற்றிக்கு பின்னால் நாட்டுமாடுகளை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உயர்ந்த நோக்கமும், விருப்பமும் இருந்துள்ளது என  ஜல்லிக்கட்டுப்போராட்டத்தில் பங்கேற்ற பொன்.குமார்  தெரிவித்துள்ளார். எனவேதான் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு நடந்த முதல் ஜல்லிக்கட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த காளைக்கும், சிறந்த வீரருரக்கும் -2 பால் தரக்கூடிய இரண்டு நாட்டுப் பசு மாடுகளை பரிசாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

ஆனால், போட்டியை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியில் வெற்றிப்பெறுகிறவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுத்து பார்வையாளர்களை கவர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளதாக குற்றம்சாட்டிய பொன்.குமார் போட்டிகளை வணிக நிறுனங்களும், அரசியல் கட்சியினரும் தங்களுக்கான ஒரு களமாக பயன்படுத்த தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.