ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு அரசு வேலையா? அமைச்சர் தங்கமணி

ஜல்லிக்கட்டு போட்டியில் வென்றவர்களுக்கு அரசு வேலையா? அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கால்நடைத்துறை சார்பில் கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கால்நடைத்துறை சார்பில் கால்நடை கிளை நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். 

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிப்பெற்ற காளையர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 

jallikattu

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு என்பது தவறான தகவல். அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை  தமிழக முதல்வரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். தமிழ்நாடு மின்வாரியத்தில் அனைத்து பணிகளுக்கும் ஒளிவு மறைவின்றி நேர்மையான முறையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு நேர்மையான முறையில் தேர்வுகள் நடைபெறும். வேலை வாங்கி தருவதாக கூறுபவர்களிடம் பொதுமக்கள் ஏமாந்து விட வேண்டாம்” எனக்கூறினார்.