ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம்; சாதிரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!

 

ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனம்;  சாதிரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை!

ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண் டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தவிட்டுள்ளார்.

சென்னை: ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண் டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தவிட்டுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, சேலம்,  மதுரை, திண்டுக்கல் உட்பட பல இடங்களில் நடத்தப்படுகிறது. இதனால் பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளின்போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

அவை பின்வருமாறு:-

rajendran

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு இந்த முறை தடை எதுவும் இல்லாததால் புதிதாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்த இடங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும். சிறிய அளவில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதிரீதியிலான மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். இதில் உளவு பிரிவு போலீசார் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு, முன்னெச்சரிக்கை தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். 

jallikatu

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாக வழங்கும் பாதுகாப்பை விடவும் இந்தமுறை கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க தனியாக போலீசாரை நியமிக்க வேண்டும். 

பார்வையாளர்கள் மாடத்தில் போலீசாரும் இருக்க வேண்டும். சந்தேக நபர்களையும், மது அருந்தி வரும் நபர்களையும் உடனடியாகப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றுவிட வேண்டும்.

jalli

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளுக்குள் தேவையில்லாத வாகனங்கள் மற்றும் பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் வரும் நபர்களை அனுமதிக்க வேண்டாம் 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து உளவுப் பிரிவு அதிகாரிகளும், தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளும் டிஜிபியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.