ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

 

ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

மாட்டுப் பொங்கல் திருநாளன்று மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் கரும்பு விற்பனை, பானை விற்பனைகள் அமோகமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையின் மிக முக்கிய நிகழ்வான மாட்டுப் பொங்கல் திருநாளன்று மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 

ttn

தமிழகத்திலேயே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகுந்த புகழ் பெற்றது. வரும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குக் காளைகளைத் தயாராக்கும் பணி மும்முரப்படுத்த பட்டுள்ளது.15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக் கட்டு நடைபெறும். இதனைக் காண வெளிநாடுகளில் இருந்தும், தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள்வர். ஜல்லிக்கட்டில் சீறிப்பாயக் காளைகளுடன், காளைகளை அடக்க வீரர்களும் ஆயத்தமாகி வருகின்றனர்.  

ttn

இந்நிலையில், மாடுபிடி வீரர்களுக்கான வயது மாற்றியமைக்கப் பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கான வயது 18 முதல் தொடங்கி வந்த நிலையில், இளைஞர்களுக்கு ஏற்படும் விபத்தைத் தடுக்க வயது வரம்பு 21 முதல் 45 ஆக மாற்றப்பட்டுள்ளது என்று அம்மாவட்ட ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார். அதே போல, மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள நாளை நடைபெற உள்ள உடல்தகுதி பரிசோதனை முகாமிலும்,  பாலமேட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 11 ஆம் தேதி நடைபெற உள்ள முகாமிலும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.