ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு!

ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் விடுவிப்பு!

ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அங்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அங்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 நீக்கி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை தனி யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதனால் ஜம்மு காஷ்மீரில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. மாநிலத்தில் இருந்து வெளிமாநில மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வெளிஉலக தொடர்பு இல்லாத அளவுக்கு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்ககோரி தமிழகத்திலுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Jammu

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற 24ஆம் தேதி நடைபெறவுள்ளதால், ஜம்முவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முவில் அமைதியான சூழல் மெல்ல திரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதனால்  தேவேந்தர் சிங் ரானா, ராமன் பல்லா, ஹர்ஸ்தேவ் சிங் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.