ஜமால் கஷோகி பிள்ளைகளுக்கு கோடிகளில் இழப்பீடு; வாயை அடைக்கும் சவுதி அரசு!

 

ஜமால் கஷோகி பிள்ளைகளுக்கு கோடிகளில் இழப்பீடு; வாயை அடைக்கும் சவுதி அரசு!

ஜமால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது. மேலும், இதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் துருக்கி கூறியது

நியூயார்க்: சவுதி தூதரகத்தில் கொல்லப்பட்ட ஜமால் கஷோகி பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கில் பணம் மற்றும் சொத்துகளை இழப்பீடாக வழங்க சவுதி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்த ஜமால் கஷோகி துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.

saudi prince

இதையடுத்து, ஜமால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றம்சாட்டியது. மேலும், இதற்கான வீடியோ ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் துருக்கி கூறியது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக தலைவர்கள் பலரும் சவுதி அரேபியாவுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், அவர் மாயமான விவகாரம், சர்வதேச அளவில் சவுதி அரேபியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பல்வேறு நெருக்கடிகளுக்கு பின்னர், இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கொலை செய்யப்பட்டதாக சவுதி ஒப்புக்கொண்டது.

jamal khashoggi

தூதரகத்தில் நடைபெற்ற சண்டை ஒன்றில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என மழுப்பலாக கூறிய சவுதி அரசு, தனது உளவுப்பிரிவு துணைத் தலைவர் அகமது அல்- அன்சாரி மற்றும் அரசின் ஊடக ஆலோசகர் சவுத் அல்- கதானி ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்தது. அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக 18 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் சவுதி அரேபியா தெரிவித்தது. எனினும், அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை.

இந்நிலையில், ஜமால் கஷோகி பிள்ளைகளுக்கு கோடிக்கணக்கில் பணம் மற்றும் சொத்துகளை இழப்பீடாக வழங்க சவுதி அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

jamal khashoggi

அந்த செய்தியில், ஜமால் கஷோகி வழக்கு தொடர்பாக சவுதி அரசை பற்றி பொது வெளியில் விமர்சிக்காமலும், அறிக்கைகள் வெளியிடாமலும் இருக்க அவரது இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகளுக்கு இழப்பீடுகள் வழங்கி குற்றத்தை மறைக்க சவுதி அரசர் சல்மான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

துறைமுக நகரமான ஜெட்டாவில் சுமார் நன்கு மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வீடுகள் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் 10,000 அமெரிக்க டாலர்களை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும், அவர்களுக்கு தலா மில்லியன் டாலர்கள் ரொக்கம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு விலக்கு; காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு!-முழு விவரம்