ஜப்பான் நாட்டை தாக்கும் மேலும் இரு புயல்கள்..!

ஜப்பான் நாட்டை தாக்கும் மேலும் இரு புயல்கள்..!

ஜப்பான் நாட்டில் கடந்த வாரம் வந்து சென்ற ஹபீகிஸ் புயலால் பெரும் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. இந்நிலையில் மேலும் இரண்டு புயல்கள் ஜப்பான் நாட்டை தாக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கு பகுதி மற்றும் வடக்கு பகுதிகளில் ஹபீகிஸ் புயல் தாக்கியதில், பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த புயலால் கடும் வேகத்துடன் கூடிய சூறைக் காற்று அடித்ததால் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு எடுத்தது. 

japan

இதன்காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வணிக வளாகங்கள், வீடுகள் மற்றும் கடைகள் அனைத்தும் மூழ்கடிக்கப்பட்டன. 75,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து உகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 78 பேர் உயிரிழந்துள்ளனர் 400-க்கும் மேற்பட்டோர் காயம் காரணமாக தற்போது வரை மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் தற்போது வரை காணவில்லை. 
 
ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீண்டு வராத ஜப்பானை மேலும் இரண்டு புயல்கள் தாக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

‘நியோகுரி’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புயல், நாளை டோக்கியோவின் தெற்கு மற்றும் தென் மேற்கு கடற்கரைப் பகுதியை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் பொழுது சுமார் 162 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

japan

இதேபோல் “புலாய்” என பெயரிடப்பட்டுள்ள மற்றொரு புயல் வருகிற 26-ஆம் தேதி ஜப்பான் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் பொழுது சுமார் 180 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு மட்டுமே 21வது முறையாக ஜப்பான் நாட்டை புயல் தாக்குகிறது. ஏற்கனவே தாக்கப்பட்ட புயலின் தாக்கத்தினால் தற்போதுவரை மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில் மீதம் இரண்டு புயல்கள் வர இருப்பதை அறிந்த வானிலை ஆய்வு மையம் அந்நாட்டு அரசுக்கு தகவல் தெரிவித்தது. இதனால் செய்வதறியாது திகைத்து வருகிறது ஜப்பான் அரசு. பாதிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

-vicky