ஜப்பான் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’!

 

ஜப்பான் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஜி.வி.பிரகாஷின் ‘சர்வம் தாளமயம்’!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விழாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விழாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள இப்படம் சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற 31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கர்நாடக இசையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தினை பார்த்தவர்கள்,படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

சர்வதேச திரைப்பட விழாவில் பார்வையாளர்களின் கவனத்தை இப்படம் ஈர்த்துள்ளதையடுத்து, ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.