ஜப்பான் கப்பலில் பரிசோதனை செய்துகொள்ளாமல் தப்பித்து சென்ற 23 பயணிகள்!

 

ஜப்பான் கப்பலில் பரிசோதனை செய்துகொள்ளாமல் தப்பித்து சென்ற 23 பயணிகள்!

ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த ஹாங்காங் சென்று திரும்பிய அந்தக் கப்பலில் கொரானா தொற்றால் முதியவர் ஒருவர் பலியானதை அடுத்து, யோகோஹாமா பகுதியில் அந்த கப்பல் நிறுத்திவைக்கப்பட்டது. கப்பலிலிருந்த 3700 பயணிகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பரிசோதனையின் முடிவில்  8 இந்தியர் உட்பட சுமார் 650 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தபட்ட பின்னர் அவரவர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

Japan ship

இந்நிலையில் கொரானா வைரஸ் அச்சம் காரணமாக துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஜப்பான் சொகுசு கப்பலில் இருந்து 23 பேர் உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்படாமல் வெளியேறியதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்கள் யார் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. சீனாவை அச்சிறுத்திவந்த வைரஸ் தற்போது தென்கொரியா,இத்தாலியை உலுக்கிவருகிறது. இந்நிலையில் தப்பொச்சென்ற 23 பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை. நிர்வாக குறைபாடு காரணமாக நடந்த இந்த தவறுக்கு ஜப்பான் அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.