ஜப்பானை மிரட்டும் ஹகிபிஸ் புயல்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #PrayforJapan

 

ஜப்பானை மிரட்டும் ஹகிபிஸ் புயல்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #PrayforJapan

ஜப்பானை ஹகிபிஸ் எனும் அதிபயங்கர சூறாவளி தாக்கியதால் அந்நாடு முழுவதுமே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஜப்பானை ஹகிபிஸ் எனும் அதிபயங்கர சூறாவளி தாக்கியதால் அந்நாடு முழுவதுமே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

5 ஆம் நிலை சூறாவளியான ஹகிபிஸ் 180 கி.மீ., வேகத்தில் ஜப்பானைத் தாக்கும் எனவும், இதனால் 252 கி.மீ., வேகத்துக்கு சூறைக் காற்று வீசக்கூடும் எனவும் ஜாப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே உள்ள ‘இசூ’ தீபகற்பத்தில் ‘ஹகிபிஸ்’ எனும் புயல் இன்று மாலை கரையைக் கடந்தது. இதைத் தொடர்ந்து, கிழக்கு கடலோரப் பகுதிகளை நோக்கி, இப்புயல் நகர்ந்து வருகிறது. இதனால் ஜப்பானின் பல்வேறுப் பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் புயல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான மற்றும் கடற்கரையோரங்களில் வசிக்கும் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சூறாவளிக்கு இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 50 பேர் காயமடைந்துள்ளனர். சாலைகளையும், குடியிருப்புகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் #PrayforJapan என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் ஜப்பானியார்கள் வெளியிட்டுவருகின்றனர். ஜப்பான் 60 ஆண்டுகளில் கண்டிடாத மகிப்பெரிய சூறாவளியாக ஹகிபிஸ் பார்க்கப்படுகிறது. சூறாவளியின் வேகம் அதிகரித்ததால் சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.